இந்தோனேசியாவின் சுமத்ராதீவில் இன்று நிலநடுக்கம் – JM MEDIA.LK

இந்தோனேசியாவின் சுமத்ராதீவில் இன்று நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும்; சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

சுமத்ரா தீவின் துறைமுக நகரமான படாங்கில் இன்று அதிகாலையில்; ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் சுமார் 30 வினாடிகள் குலுங்கியதாகவும் பயம் காரணமாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருவில் கூடினர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *