மஹிந்தவின் பாதயாத்திரை மாவனல்லைக்கு வரத் தடை – 4 Mp கள் பங்கேற்கவும் அனுமதி மறுப்பு – JM MEDIA.LK

மஹிந்தவின் பாதயாத்திரை மாவனல்லைக்கு வரத் தடை – 4 Mp கள் பங்கேற்கவும் அனுமதி மறுப்பு

அர­சுக்கு எதி­ராக கண்­டி­யி­லி­ருந்து கொழும்­பு நோக்கி இடம்பெறவுள்ள பாதயாத்திரை  மாவனல்லை நகருக்குள் பிரவேசிக்க நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பேரணிக்கு மாவனல்லை நகருக்குள் நுழைவதற்க்கு தடை விதித்து மாவனல்லை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாவனல்லை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கையின் அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கண்டியில் நாளை -28- ஆரம்பமாகவுள்ள பாதயாத்திரைக்கு மஹிந்த அணியின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *