முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி – JM MEDIA.LK

முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 106 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடுகின்றது.

இதன்படி இரு அணிகளும் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி, கண்டி – பல்லேகல மைதானத்தில் இடம்பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 34.2 ஓவர்களுக்கு மாத்திரமே தாக்குப் பிடித்து 117 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 203 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.

இரண்டாம் இன்னிங்சில் களமிறங்கிய இலங்கை அணி சார்பாக குசல் மெண்டிஸ் அதிரடியாகி துடுப்பெடுத்தாடி 176 ஓட்டங்களைப் பெற்றார்.

அதன்படி இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 353 ஓட்டங்களைப் பெற்று அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.

பின்னர் 268 ஓட்டங்களை நோக்கி அவுஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது.

எனினும் நிர்ணயிக்கப்பட்ட ஓட்ட இலக்கை அவுஸ்திரேலியாவால் பெற முடியாமல் 161 ஓட்டங்களைப் பெற்று அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.

அதன்படி இலங்கை அணி 106 ஓட்டங்களால் அவுஸ்திரேலிய அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் இலங்கை அணியின் ரங்கன ஹேரத் 54 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களையும் சந்தகன் 49 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *